இந்தியாவில் கல்லா கட்டும் ஹாலிவுட் படங்கள் - விஸ்வரூப வளர்ச்சி - ஒரே ஆண்டில் இத்தனை கோடி வசூலா..!


ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுதும் நல்ல வரவேற்பை பெருகின்றன. இந்தியாவில், பெரிய பெரிய மல்டிஃப்லக்ஸ் அரங்குகளில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. அதுவும், டப் செய்யப்படாமல். ஆனால், இப்போது வெளியாகும் ஹாலிவுட் படங்கள் அப்படியே இந்திய மொழிகளில் டப் செய்யபட்டு கணிசமான வசூலை அள்ளுகின்றன.

மேலும், சீனாவில் கூட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்பபடம் 3000 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் செய்தது. அதனை தொடர்ந்து சவுத் கொரியாவிலும் மிகப்பெரும் வசூலை ஹாலிவுட் படங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


அந்த வரிசையில் தற்போது இந்தியா பக்கமும் ஹாலிவுட்டின் பார்வை திரும்பியுள்ளது, அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்தியாவில் மட்டும் 450 கோடி ரூபாய்களை அள்ளிக்கொண்டு போனது.


மேலும், ஸ்பைடர் மேன் ரூ 100 கோடி, கேப்டன் மார்வல் ரூ 100 கோடி, லயன் கிங் ரூ 150 கோடி உட்பட ஹாலிவுட் படங்கள் ஒட்டு மொத்தமாக வருடத்திற்கு 3000 கோடியில் இருந்து 4000 கோடி வரை இந்திய பணத்தை வெளியில் கொண்டு செல்கின்றன. மேலும், இந்திய படங்களுக்கு கடும் போட்டியாக அமைந்து வருகின்றது. 

திரைப்படங்கள் மூலம் மட்டும் 3000-4000 கோடி ரூபாயை வெளியில் எடுக்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்திய படங்களும் வெளிநாட்டில் வெளியாகி அதே அளவுக்கு பணத்தை இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும் என்பது தான் ரசிகர்களின் பிரதான கருத்தாக உள்ளது.
Previous Post Next Post