சினிமா தவிர, கார் ரேஸ், பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வடிவமைத்தல், மற்றும் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவரான நடிகர் அஜித், கோவையில் நடைபெற்று வரும் 45 வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார்.
நேற்றிலிருந்து அஜித் துப்பாக்கி சுடும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி ரசிகர்கள் களிப்பில் ஆழ்த்தி வருகின்றன. இந்தப் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 800க்கும் மேற்பட்டோ ஐந்து பிரிவுகளில் கலந்துக் கொள்கின்றனர்.இதில் நடிகர் அஜித்குமார் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாகக் கலந்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் நான்கு சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பிரபல பாடலாசிரியரும் ,அஜீத்த் தீவிர ரசிகருமான எழுத்தாளர் அருண் பாரதி அஜீத் குறித்து இரண்டு வரியில் "துப்பாக்கி உடுத்திடும் ஆடையடா, தோட்டா நீ படித்திடும் கீதையடா" என கவிதை ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசுரித்துள்ளார்.
— Arun Bharathi Lyricist (@ArunbharathiA) August 1, 2019