நடிகர் சரவணன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் 40 நாட்களை கடந்து வந்து விட்டார். ஆனால், அவர் இளமை காலத்தில் செய்த ஒரு தவறுக்காக இன்று அவமானப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக பிக்பாஸ் குழுவினரே வெளியே அனுப்பிய ஒரு போட்டியாளர் என்ற அவமான சின்னத்துடன் வெளியேறியுள்ளார் நடிகர் சரவணன். இது பார்வையாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்காக, நடிகர் சரவணன் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். ஒரு வாரம் கழிந்து விட்ட நிலையில் இப்போது ஒரு குற்றவாளி போல அவர்வெளியேற்றப்பட்டுள்ளார். பெண்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று அந்த தொலைக்காட்சி அவரை வெளியே அனுப்பி உத்தரவிட்டது.
இந்த பிரச்னைக்கு காரணமே நடிகர் கமல்ஹாசன் தான் என்கிறார்கள் ரசிகர்கள். தேவையே இல்லாமல் பேருந்து உரசல் விஷயத்தை பேசி சரவணன் வாயை பிடுங்கி அவருக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.
அதே நேரம், சரவணன் அப்படி கூறியவுடன் " அவர் அதையும் தாண்டி புனிதராகி விட்டார்" என்று கூறிய கமல்ஹாசனும் குற்றவாளி தான். அவரையும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுங்கள். அப்போது ஒப்புக்கொள்கிறோம் நீங்கள் பெண்களை மதிக்கிறீர்கள் என்று பெரும்பாலனா பிக்பாஸ் ரசிகர்கள் கண்டனன் தெரிவித்து வருகிறார்கள்.