ரஜினியின் தர்பார் படம் குறித்து செம்ம ஹைலைட் அப்டேட் கொடுத்த பிரபலம் - ரசிகர்கள் மகிழ்ச்சி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் தர்பார். ரஜினி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு என பலர் நடிக்கின்றனர். 


பல வருடத்திற்கு பிறகு இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், ரஜினிகாந்த். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற நிலையில், சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அனிருத், தர்பார் படத்திற்கான ரிலீசுக்கு தானும் காத்திருப்பதாகவும் நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் இசை வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்கள், இவர் டுவிட்டரில் தர்பார் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.அதில், ஒரே ஷாட்டில் ரஜினி-நயன்தாரா இடம்பெறும் ஒரு பெரிய காட்சி தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே என குறிப்பிட்டுள்ளார்.