மியா கலிஃபாவிற்கு அறிமுகம் தேவையில்லை. நேரடியாக விஷயத்துக்கு செல்வோம். சமீபத்தில், பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு மியா அளித்த பேட்டியில் அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை தருவதாக உள்ளன. நான் அந்த மாதிரி படங்களில் நடித்தது பற்றி பெருமை படவில்லை. வெட்கப்படுகிறேன்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் அந்த படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். பொருளாதார சூழ்நிலை காரணமாகவே நான் அந்த படங்களில் நடித்தேன். பொதுவாக, பண கஷ்டத்தில் இருக்கும் பெண்கள் தான் இந்த மாதிரி படங்களில் நடிக்க வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஜீரணிக்க முடியாத அளவுக்கு கஷ்டங்கள் உள்ளன. அதனையெல்லாம் கேட்டால் அவர்கள் செய்தது தவறே இல்லை என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால்,இப்படியான காரணங்களுக்காக அந்த மாதிரியான படங்களில் நடித்து காசு சம்பாதிப்பது சரியானது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
நான் முதன் முதலில் அந்த படத்தில் நடிக்கும் போது என் நண்பர்கள், உறவினர்களுக்கு இது தெரிந்து விட கூடாது என்று மிகவும் பயந்தேன். ஆனால், அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால், அவமானத்தில் கூனி குறுகிப்போனேன். தனி அறையில் கதறி அழுதேன்.
உடல் தெரியும் அளவிற்கு ஆடை அணிவதே என் மதத்தில் தவறான விஷயம். ஆனால், நான் உடையே இல்லாமல் அப்படி நடித்து குறித்து பல கண்டனங்கள் எழுந்தன. பலரும் மிரட்டினார்கள். குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திலிருந்து மிரட்டல் வந்தது. ஒரு முறை, என்னுடைய முகவரி, மற்றும் என் வீட்டை வட்ட மிட்டு கூகுள் மேப் ஒன்றை எனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அனுப்பி மிரட்டியது.
இதனால், பயந்து போன நான் இரண்டு வாரம் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தேன். அந்த மாதிரி படங்களில் நடிப்பவர்கள் கோடி கோடியாக சம்பாதிகிரார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த மாதிரி படங்களில் நடித்து நான் இதுவரை சம்பாதித்தது வெறும் 12500 டாலர்கள் தான் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட 9 லட்சம் வரும்) என்று கூறியுள்ளார் மியா கலிஃபா.



