ஹாலிவுட் பட நடிகைக்கு ரேஞ்சுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ப்ரியா ஆனந்த்..!


‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார்.அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவரது வயதில் உள்ள நடிகைகள் பலரும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நிலையில்,இவர் மிகவும் குறைவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியபதிலாவது, எனக்கு ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது. 


ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன். இனிமேல், பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். என்று கூறியுள்ளார். 


இந்நிலையில், ஹாலிவுட் பட நடிகை ரேஞ்சுக்கு செம ஹாட்டான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.