கோமாளி திரைப்படத்தில் "கோமா"-வில் விழும் நாயகன் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் கண் விழிக்கிறார். ஆனால், தான் கோமாவில் விழுந்ததை, நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார் நாயகன்.
இதனால், நண்பனை நம்ப வைக்க, யோகிபாபு டிவியை ஆன் செய்ய, அதில், நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறார். அதைப் பார்க்கும் ஜெயம் ரவி, ‘இது 1996ல் சொன்னது.! யாரை ஏமாத்த பாக்குறீங்க.!’ என்று பதில் அளிக்கிறார்.
இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. ஆனால், ரஜினி ரசிகர்களால் இதனை நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகர் கமல் ஹாசனும் இது குறித்து படத்தின் தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்தார் என மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ் நடிகர் ஜெயம் ரவியை வெளியிட்ட கோமாளி டீசறை குறிப்பிட்டு "தாறு மாறு மச்சி..!" என கூறியுள்ளார்.
இதனை பார்த்த நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள், இப்போ வந்த விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் கூட வளர்ந்து விட்டார்கள். ஆனால், நீங்கள் என்ன என்றால், சக நடிகரை கலாய்ப்பதை ஏளனம் செய்து சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். என வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்து விட்டனர்.
நேத்து வந்த விஜய் சேதுபதி, சிவா கார்த்திகேயன் கூட இன்னிக்கு முன்னணி நடிகரா வலம்வராங்க— Satheesh (@Satheesh_2017) August 4, 2019
உருப்படியா 4 படம் நடிச்சு முன்னுக்கு வர வக்கில்லை
இதுல அடுத்தவன கலாய்ச்சி ஆனந்தம் அடையுறானுங்களாம் 😂
கடைசி வரை இப்படியே மாத்தி மாத்தி சோப்பு போட்டுக்கு வேண்டியது தான் 😂😂@Sibi_Sathyaraj https://t.co/PgzURyvmS5
Tags
Sibi Sathyaraj