நடிகர் அஜித் பலருக்கும் பிடித்த நடிகர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலே போதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்பதை வாழ்ந்து காட்டி வருகிறார்.
பிற நடிகர்கள் ரசிகர்களை கூட்டி கூட்டம் போடுவது, அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறுவது என்று நடிப்பை தாண்டி பல விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால்,தொழில், விளையாட்டு,அறிவியல் என தன் பார்வைகளை தனித்துவமான திசையில் செலுத்தி வருகிறார் தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னன் அஜித்.
அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் அவரை நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்தித்தார். அப்போது, அஜித் "நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்" என எளிமையாக கூறியுள்ளார்.
இது குறித்து குற்றலீஸ்வரன் இது கற்பனைக்கு எட்டாத சந்திப்பு. அஜித்தின் எளிமையும், விளையாட்டு துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டேன் என ட்விட்டரில் உருக்கமாக கூறியுள்ளார்.