"எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு, அதை வாங்கிட்டு வா" என்று கேட்ட காதலிக்கு காதலன் அளித்த பதிலை பாருங்க..!


பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கை ஈர்த்து திடப்பொருளாக மாற்றி தக்க வைத்துக்கொள்ளும் நாப்கின்களை பயன்படுத்திகிறார்கள். பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த துணிகளுக்கு இது சிறந்த மாற்றாக கருதப்பட்டது. 


இப்போது, நாப்கிங்களுக்கு பதிலாக டேம்பான்ஸ் என்ற ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஏனென்றால், நாப்கின்கள் பயன்படுத்தும் போது தொடை இடுக்கில் ரேஷ்கள் மற்றும் அரிப்பு ஏற்படுவதாக பல பெண்கள் கூறுகிறார்கள். அதற்கு தீர்வாக இந்த டேம்பான்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கை சமாளிக்க, பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளப்படும் நாப்கின் என்று சொல்லலாம். நீளமாக பருத்திப் பஞ்சுகள் சுத்தப்பட்டு இருக்கும் டேம்பான்ஸை மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்வதன் மூலம் டேம்பான்ஸில் உள்ள பருத்தி, ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும்.


இது எளிமையாக இருப்பதால் பெண்கள் பலரும் இதனைவிரும்புகிறார்கள். இந்நிலையில், டிவிட்டரில் @broganpaget என்ற முகவரியில் இருக்கும் ஒரு பெண் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த அனைவரும் குபீர் என சிரித்திருப்பார்கள்.



ஆம், எனக்கு பீரியட்ஸ் ஆகி விட்டது. அதனால், டேம்போன்ஸ் வாங்கி கொண்டு வா என தனது காதலனிடம் கூறியுள்ளார் அந்த பெண். காதலனும், அருகில் இருந்த சூப்பர் மார்கெட்டுக்கு சென்று குழம்பி போயுள்ளார். உடனே, காதலிக்கு "Do u want the lemon or lime flavor..?" என்று காதலிக்கு குருஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளார்.

இதனால் தான் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்கள். காரணம், டேம்போன்ஸ்-ல் Flavor-கள் என்பதே இல்லை. அதன் அளவை பொருத்து வேறு வேறு வண்ண பைகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனை Flavor என்று நினைத்துக்கொண்டு காதலன் என்ன Flavor வேண்டும் என கேட்டுள்ளார்.

இவரின் இந்த பதிலை பார்த்து பலர் சிரித்து வந்தாலும். காதலி கேட்டு விட்டாலே என்று எதையாவது வாங்கிக்கொண்டு போகாமல் எதை வாங்குவது என விவரமாக கேட்டு வாங்கிக்கொண்டு போகிறாரே இவர் தான் காதலன் என்று அவரை புகழ்ந்தும் வருகிறார்கள்.

Advertisement