நேற்றைய பிக்பாஸ் எபிசோடின் இறுதியில் சரவணனை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து பேசிய பிக்பாஸ், ‘மீரா மற்றும் சேரன் விவகாரம் பற்றி பேசும் போது பேருந்தில் ஆண்கள் பெண்களிடன் தவறாக நடந்து கொள்ளவே பயணிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்தது.
அப்போது நீங்களும் உங்கள் கல்லூரி காலங்களில் இந்தை செய்திருப்பதாக கூறியிருந்தீர்கள். இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் எந்தவிதமான தவறாக அனுகுமுறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொடரக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் உடனே வெளியேற்றப்படுகீர்கள்’ என்று கூறினார் இதை தொடர்ந்து சரவணன் மெயின் டோர் வழியாக அனுப்பப்படாமல் கன்ஃபெஷன் ரூமில் இருந்த மற்றொரு கதவு வழியாக வெளியே அனுப்பப்பட்டார் அதுவும் சக போட்டியாளர்கள் ஒருவருக்கு கூட தெரியாமல்.
ஆனால், சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற நடிகர் கமல்ஹாசனை "கோர்த்து வுடுறான்" என்று ஒருமையில் பேசியது தான் காரணம் என கூறி ரசிகர்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,