பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் சுமார் ரூ 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் மட்டும் ரூ 120 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.
இதில் ஆந்திரா மற்று தெலுங்கானாவில் மட்டும் ரூ 35 கோடி, வட இந்தியாவில் ரூ 30 கோடி, தமிழ்நாடு, கேரளா சேர்த்து ரூ 10 கோடி, கர்நாடகாவில் ரூ 10 கோடி முறையே வசூல் வரும் என கணித்துள்ளனர்.
எப்படியும் அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் நாள் 2 மில்லியன் டாலர் வசூல் வந்தாலும் ஆச்சரிமில்லையாம்.முன்னதாக, பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் முதல் நாளில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Saaho movie