மெர்சல் படத்தின் வாழ்நாள் சாதனையை 17 நாளில் தூக்கி தூரமாக எறிந்த "வெறித்தனம்" - மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படத்தில் இருந்து வெளியான "வெறித்தனம்" என்ற பாடல் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றது. 


இந்த பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடல் சற்று முன்பு 1.7 மில்லியன் லைக்குகள் என்ற மைல்கல்லை தொட்டது. 

இதில் என்ன இன்னொரு விஷயம் என்னவென்றால், மெர்சல் படத்தின் டீசர் இதுவரை பெற்ற லைக்குகள் 1.7 மில்லியன் தான். ஆனால், வெறித்தனம் பாடல் அதனை வெளியான 17 நாளில் செய்துள்ளது விஜய் ரசிகர்களின் ஆன்லைன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகிறது. 


இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருகின்றனர். 

Advertisement