கமல்ஹாசனை மனதில் வைத்துக்கொண்டே விஜய்யை இயக்குவார் - தளபதி 64 குறித்து சர்ச்சை பட இயக்குனர்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிகில். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கடுத்து விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், கமலை மனதில் வைத்து, புதிய படத்தில் நடிகர் விஜய்க்கான கேரக்டரை அமைப்பார் என இயக்குநர் ரத்னகுமார் கூறியிருக்கிறார். 


சமீபத்தில் , மிகுந்த சர்ச்சைக்குள்ளான ஆடை படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் தளபதி 64 குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது. வாழ்த்துக்கள்; இது ஒரு ஆரம்பம் தான். நீங்கள்(லோகேஷ் கனகராஜ்), நடிகர் கமலின் தீவிர ரசிகர் என்பது தெரியும். எனவே, தளபதி 64ல், கமல் ஸ்டைலில் நடிகர் விஜய்யின் கேரக்டரை அமைப்பீர்கள் என நம்புகிறோம். 


ஒரு கமல் ரசிகராக, நடிகர் விஜய்யை உங்களின் அடுத்தப்படத்தில் எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். இவரைப் போலவே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், பேட்ட படத்தில், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும், ஒரு ரசிகரின் மனநிலையில் இருந்தே இயக்கினேன் என்று கூறினார்.

அதேபோல, நடிகர் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை, நடிகர் கமலை மனதில் வைத்தே இயக்குவார் என நம்பலாம் என தெரிவித்திருக்கிறார் இயக்குனர்  ரத்னகுமார்.
Previous Post Next Post