தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். பிரிட்டோ தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் நாயகியாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தான் நடிக்க உள்ளாராம்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும்.
அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகின்றது. தளபதி 64 படத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி காம்போ கோலிவுட் வட்டாரத்தை அதிர வைக்கிறது.