காப்பான் - ஒத்தசெருப்பு சைஸ் 7 படங்களில் முதல் நாள் வசூல் - எது முதலிடம்..!


நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான் திரைப்படம் பழைய கதை, அதை விட பழைய திரைக்கதை என எதிர்மைரயான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. 


ஆனாலும், வழக்கமான சூர்யா படங்களுக்கு இருக்கும் ஒப்பனிங்  கிடைத்துள்ளது. இந்திய அளவில், 13.50 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 2 கோடி ரூபாயும் என முதல் நாளில் 15.50 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளது. 

அதே நேரம், நடிகர் பார்த்திபனின் புதிய முயற்சியாக ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் பாராட்டை பெற்றுள்ளது. 


நடிகர் ரஜினிகாந்த் கூட சமீபத்தில் இந்த படத்திற்காக பார்த்திபனுக்கு விருதுகள் தேடி வரும் என்று புகழ்ந்திருந்தார்.  இந்த படமும் சொல்லிக்கொள்ளும்படியான வசூலை செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களின் சென்னை வசூல் நிலவரம் பின் வருமாறு :
  1. காப்பான்- ரூ. 89 லட்சம்
  2. ஒத்த செருப்பு சைஸ் 7- ரூ. 11 லட்சம்
Previous Post Next Post