தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அது தலைகீழாக நடந்து விட்டது. நடிகை ஜெய்யை பிரிந்து முழு வீச்சில் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார்.
சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தது பற்றி அஞ்சலி கூறியதாவது, கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது.
புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்.நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை.
இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை என்று கூறியுள்ளார்.
இப்போது, சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆரம்பிக்கும் போது இருந்த எதிர்பார்ப்பு இப்போது சுத்தமாக இல்லை என்பது தான் உண்மை. சுமார் இரண்டு வருடங்களாக இந்த படத்தை போட்டு உருட்டிக்கொண்டிருகிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தை பற்றிய பேச்சை கிளப்பிவிட பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது படக்குழு. ஆனால், பிகில் ஆடியோ வெளியீடு வந்து அதையும் அமுக்கி விட்டது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நடிகை அஞ்சலி ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்து தன் பங்குக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,
Tags
Actress Anjali