குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சீரியல், சினிமா, ஆங்கரிங் என கலந்துக் கட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா, தொடர்ந்து, பாண்டவர் பூமி, விரும்புகிறேன் ஆகியப் படங்களில் நடித்தார்.
பின்னர் தம், மொழி, திமிரு, நான் மகான், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும், மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
அதோடு பல சீரியல்களில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து விட்டார், நடித்துக் கொண்டும் இருக்கிறார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும், “அரண்மனை கிளி” தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நீலிமா.
இருப்பினும் இவரது கலை தாகம் இன்னும் அடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நீலிமாவுக்கு பக்க பலமாய் இருப்பது, அவரது கணவர் இசை. தற்போது இவர்களின் குழந்தை கொஞ்சம் பெரியவளாகிவிட்ட காரணத்தினால், மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் நீலிமா.
அதனால் அவ்வப்போது வித விதமான காஸ்ட்யூம்களில் கலக்கலான ஃபோட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான படங்களையும் பதிவேற்றியிருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்,