சமீப காலமாக தமிழ் சினிமாவில் 'அடல்ட் காமெடி' வகையை சேர்ந்த படங்களை அவ்வப்போது தயாரித்து வெளியிடுகிறார்கள். இந்தக் கால இளைஞர்களை கவரும் விதமான படங்கள் என்று சொல்லிக் கொண்டு தவறான படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் அந்த முயற்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சில திரைப்படங்களில் படங்களில் அப்படிப்பட்ட ஆபத்தமான காட்சிகள் இல்லை என்றால் கூட ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஆபாசமான, தரமற்ற போஸ்டர்களை வெளியிடுவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே, இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய ஆபாசப்படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்து தன் இமேஜைக் கெடுத்துக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார், கடந்த வாரம் வெளிவந்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் வரவேற்பு மூலம் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார்.
அதன் ஈரம் காய்வதற்குள் 'பேச்லர்' என்று அவர் அடுத்து நடிக்கப் போகும் படத்தின் போஸ்டர் மூலம் அந்த இமேஜை கெடுத்துக் கொண்டுள்ளார். ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையில் மர்ம உறுப்பின் மீது அவர் தலை வைத்திருக்கும் அந்த போஸ்டருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தன்னை ஒரு சமூக ஆர்வலராகவும் காட்டிக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷ் சமூகத்தை சீர்குலைக்கும் இப்படியான போஸ்டருக்கு எப்படி போஸ் கொடுத்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த போஸ்டரை, இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார் என்பது தான் இங்க ஹைலைட்டே..!
இதனை பார்த்த ரசிகர்கள், ஏங்க... ஜீ.வி.பிரகாஷ் உங்களுக்கு படுக்க வேற இடமே கிடைக்கவில்லையா..? என்று விளாசி வருகிறார்கள்.