தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் பிக்பாஸ் 3 சீசன் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை ஹேமா. இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற பரிசோதனை நடந்ததாக கூறி தெலுங்கு மக்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனால் பலருக்கும் அப்போது பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்கள் நடக்குமோ என்கிற சந்தேகம் எழும்பியுள்ளது.
ஆனால், இதுகுறித்து முன்னாள் பிக்பாஸ் பெண் போட்டியாளர் நடிகை உமா மகேஸ்வரி கூறுகையில், பெண் போட்டியாளர்கள் கர்பமாக இருகிறார்களா..? என்று பரிசோதனை நடத்தபடுவது உண்மை தான்.
ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்னர் நடத்தப்படும் சோதனை தான் அது. உடல் நிலை மோசமாக இருப்பவர்கள் மற்றும் கர்பமாக இருப்பவர்கள் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கர்பத்தை மறைத்து வந்து விட கூடாது என்பதற்காக நடத்தப்படும் அடிப்படை பரிசோதனை தான் இது. கர்பமாக இருப்பவர்களுக்கு பிக்பாஸ் வீடு ஏற்றது கிடையாது.
டாஸ்கள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும் அப்போது தவறுதலாக ஏதாவது நடந்து விட்டால் அதனுடைய பின் விளைவுகளை அந்த பெண் போட்டியாளர் மட்டுமில்லாமல் பிக்பாஸ் குழுவே அதற்கு முழு பொறுப்பும் ஏற்கும் சூழல் உருவாகி விடும். இதனால் தான் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.