அந்த இயக்குனருடன் போன் மூலம் உறவு வைத்துக்கொண்டேன் - ராதிகா ஆப்தே பகீர் ஸ்டேட்மென்ட்


திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. முன்னணி நடிகைகளும் இந்த பாலியல் சீண்டல்களிலிருந்து தப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபமாக வலுத்து வருகிறது. 

இந்தியில் நடிக்கும் கங்கனா ரனவத், இலியானா, தாப்ஸி போன்ற பல நடிகைகள் இந்தக் குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைக்கிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இதனை ஒரு கடமையாகவே செய்து வருகிறார். 


தென்னிந்திய படத்தில் நடிக்க வந்தபோது, உடன் நடித்த நடிகர் ஒருவர் என்னுடைய காலை தடவியதாகவும், உடனே அவர் கன்னத்தில் அறைந்ததாகவும் குறிப்பிட்டார்.  


மேலும், ஹிந்தியில் வெளியான தேவ் டி படத்தின் ஆடிஷனில், படத்துக்காக போன் வழியே உறவு வைத்துக் கொள்ளச் சொன்னதாகவும், வாய்புக்காக தானும் அதை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை வெளியே சொன்னால், இவ பெரிய பத்தினி.. பேச வந்துட்டா..! என்று தான் பேசுகிறார்கள். எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள், நடிகைகளிடம் சினிமா பிரபலங்கள் படுக்கைக்கு அழைப்பு விடுத்தால் சன்பந்தபட்ட பிரபலத்திடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியது தான் சிறப்பு. 

ஆனால், பொது வெளியில் இப்படி பேசிக்கொண்டு திரிவது முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் மீது, "இவரும் அப்படியான விஷயங்களை எல்லாம் செய்து விட்டு தான் வந்திருப்பாரோ..?" என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்று சாடி வருகிறார்கள்.

Advertisement