பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும் , நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
எட்டு வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் இணைந்திருக்கும் அழகிய தருணங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும், மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி, உள்ளிட்ட திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர்.இந்நிலையில் கடந்த 29-ம் தேதி நாகர்ஜுனாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாட ஸ்பெயின் நாட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
ஸ்பெயினில் நாகர்ஜுனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சமந்தா, வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிலையில்,கணவனுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இணையத்தில் வெளியாகிlலைக்குகளை அள்ளி வரும் அந்த வீடியோ இதோ.,