இந்திய அளவில் ட்ரெண்டாகும் #DoubleStandardVIJAY - வைரலாகும் வீடியோக்கள்


அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பிகில்’. இந்தத் திரப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 


படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி வெளியிட்டு விழா, தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் வந்திருந்தனர். 

ரசிகர்கள் அமர்வதற்கான அரங்கத்தில் உட்காருவதற்கு ரசிகர்களுக்கு ‘விஜய் மக்கள்’ இயக்கத்தின் மூலம் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், மாலையில் வந்த ரசிகர்களுக்கு இடமில்லை என காவல்துறையினர் கூறிவிட்டனர். ஆனால் ரசிகர்கள் எங்களிடம் இருப்பதே உண்மையான அனுமதிச் சீட்டு என்று கூறியுள்ளனர். 


அதற்குள் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டதால், அந்த இடமே விஜய் ரசிகர்களால் சூழப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே வேறு வழியின்றி ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கழைத்தனர் போலீசார். 

இதில் பல ரசிகர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் என்று ட்ரென்ட் செய்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், விஜய் ஒரு விஷயத்தை சொன்னால் அதே விஷயத்தை அதற்கு மாறாக இன்னொரு இடத்தில் சொல்கிறார். 

இதனால், இப்போது இதனை எதிர்க்கும் விதமாக #DoubleStandardVIJAY என்ற டேக்கை ட்ரென்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அப்படியான ட்ரெண்டில் அதிகம் வைரலாகி வரும் வீடியோக்கள், புகைப்படங்கள் இதோ,




Advertisement