Posts

Showing posts from October, 2019

போதுமான கூட்டம் இல்லாததால் "பிகில்" காட்சியை ரத்து செய்த முக்கிய திரையரங்கம்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகிகலைவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும் வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.  இந்நிலையில், சென்னையின் பிரபல திரையரங்கமான தேவி பாரடைஸ்  அரங்கத்தில் போதுமான  கூட்டம் இல்லாத காரணத்தினால் பிகில் படத்தின் காட்சியை ரத்து செய்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவி திரையரங்கில் மொத்தம் நான்கு திரைகள் உள்ளன. இதில், இரண்டு திரைகளில் பிகில் திரைப்படம் ஒளிரப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மதியம் தேவி பாரடைஸ் அரங்கில் பிகில் படத்தை பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  தேவி பாரடைஸ்-ல் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பது தான். மேலும், டிக்கெட் எடுத்தவர்கள் அனைவருக்கும் இன்னொரு திரையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்ட போது, இது வழக்கமான ஒன்று தான். பிகில் படத்திற்கு மட்டுமல்ல, மற்ற படங்களும் இப்படிதான். இரண்டு திரைகளில் ஓடு...

அட்லி-ஷாருக்கான் இணையும் படத்தின் தலைப்பு - ஆரம்பமே சர்ச்சையா..?

Image
கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் ஆர்யா, சந்தானம், சத்யராஜ், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  இந்த கலாத்திலும் ஒரே திரையரங்கில் அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.  இதனை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அட்லீயின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் மற்றும் இந்தி என மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்திற்கு "சங்கி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தொடக்கத்திலேயே சர்ச்சையா..? என்று கூறி வருகிறார்கள்.

படு சூடான பிகினி உடையில் கவர்ச்சி விருந்து வைத்துள்ள நடிகை இலியானா - வைரலாகும் புகைப்படம்

Image
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.  தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை. தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.  அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தற்போது தொப்புள், தொடை எல்லாம் தெரியும் வண்ணம் படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.  இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த கிளிப் இதோ, 

தளபதி 64 - ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி வந்தாச்சு..! - ஹாட் அப்டேட்

Image
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.  சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி அடுத்த வருடம் ஏப்ரல் 9-ம் தேதி இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில் கிருஸ்துமஸ் அல்லது புத்தாண்டு தினத்தன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகலாம் என கூறுகிறார்கள். மார்ச் மாதமே தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த...

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம் அடைந்த பிரபல காமெடி நடிகர் - அதிர்ச்சி தகவல்

Image
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் மரண செய்தி அவ்வபோது வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது.  அந்த வகையில், இன்று அப்படி பிரபல காமெடி நடிகரின் மரண செய்தி வந்துள்ளது. ஆறு படத்தில் வடிவேலு இடம்பெறும் தக்காளி சட்னி காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம்.  அதில் ஒருவரிடம் வடிவேலும் என்ன கழுத்தில் ரத்தம் என கேட்க அதற்கு அவர், தண்டவாளத்தில் தூங்கிவிட்டேன் 4,5 ரயில் கழுத்தில் ஏறி சென்றது என்பார், அவர் பெயர் ஜெயச்சந்திரன்.  இவர் நேற்று தன்னுடைய வீட்டு குளியல் அறையில் மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  ஆனால், எதிர்ப்பாராத விதமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். ஜெயச்சந்திரன் அவர்களின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகாவில் கெத்து காட்டிய அஜித்தின் படம் - வேற லெவல்

Image
2018-ம் ஆண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், இந்த 2019 வருடம் அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்துவிட்டார் தல அஜித்.  இந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று விஸ்வாசம், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.  அப்பா மகள் சென்டிமென்ட்டை தாங்கி வந்த விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடிய படம், நேர்கொண்ட பார்வை கதைக்காகவே ரசிகர்கள் அதிகம் வரவேற்ற படம்.  இந்த இரண்டுமே இந்த வருடத்தின் டாப் ஹிட் பட வரிசையில் உள்ளது. இவர் நடித்துள்ள விஸ்வாசம் படம் கன்னட மொழியில் "ஜக மல்லா" என்ற பெயரில் டப்பாகி அண்மையில் வெளியானது.  அங்கும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளதாம். அங்கு இவ்வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

பிகில் vs கைதி - எது உங்களுக்கு பிடித்த படம்..? - DD கூறியுள்ள பதிலை பாருங்க.!

Image
சின்னத்திரை நடிகையாக தனதுவாழ்கையை தொடங்கிய திவ்யதர்ஷினி. பிறகு, தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கினார். பிரபல தொலைகாட்சி ஒன்றில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் அம்மணி.  இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இப்போது, சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். நல்ல படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளார் அம்மணி.  இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் தீபாவளிக்கு வெளியான படங்களில் எந்த படம் மிகவும் பிடித்துள்ளது என்று கேட்க, தீபாவளிக்கு வெளியான படங்களில் "துப்பாக்கி" திரைப்படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறினார்.  மேலும், இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் எது உங்களை கவர்ந்தது. கைதியா..? அல்லது பிகிலா..? என்று கேட்டதற்கு, இரண்டு படமுமே நன்றாக இருக்கிறது என்று தான் கூறுகிறார்கள். இரண்டையும் விரைவில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகினி உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி..! - ரசிகர்கள் ஷாக்

Image
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ளது பிகில். இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக "வேம்பு" என்ற கதாபாத்திரத்தில் மேயாத மான் இந்துஜா நடித்து வருகிறார்.  இந்நிலையில், பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி. தற்போது காயத்ரி ரெட்டி படுகவர்ச்சியாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த நடிகரின் சாவகாசம் வேணாம் - வெள்ளை நடிகையை எச்சரிக்கும் தோழிகள்..!

Image
தனது திருமணம் தடைபட்ட கஷ்டம் கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியாக சுற்றி வருகிறார் அந்த நடிகர். என்ன சங்கதி.., என்று விசாரித்ததில் வெள்ளை நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதால் தான்  தலைவர் குஷியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.  திருமணம் தடை பட ஆயிரத்தெட்டு காரணங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்  வெள்ளை நடிகையுடன் தலைவர் காட்டும் நெருக்கமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.  படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அம்மணியுடன் அவுட்டிங் கிளம்பி விடுகிறாராம் நடிகர். தன்னிடம் எத்தனையோ விலையுயர்ந்த கார்கள் இருக்கும் நிலையில் அவற்றை தவிர்த்து விட்டு சாதாரண ஸ்விப்ட் காரில் தான் அவுட்டிங் செல்கிறாராம்.  விஷயத்தை அறிந்த வெள்ளை நடிகையின் தோழிகள் நடிகர் குறித்த சில விஷயங்களை புட்டு புட்டு வைத்து அந்த நடிகரின் சாவகாசம் வேணாம் என்று காதை கடித்து வருகிறார்களாம். ஆனால், வெள்ளை நடிகைக்கு பட வாய்புகள் எதுவும் இல்லாத நிலையில் சென்னையில் தங்கியருந்தபடியே வாய்ப்புகள் தேடி வருகிறாராம். இது தலைவருக்கு வசதியாக போய்விட்டது. விஷயம் அறிந்த நடிகையின் ...

தோல் நிறத்தில் மிகவும் இறுக்கமான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

Image
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் தந்தை போனிகபூர், தங்கை குஷிகபூருடன் அமெரிக்கா சென்றார். அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.  இதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் படப்பிடிப்பில் இருந்து தற்போது ஓய்வு எடுத்து இருக்கிறேன். ஆனாலும் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கவில்லை.  ஆரோக்கியம் முக்கியம். எனது அம்மாவும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எனது தாய் ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாரும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு உடம்பை அழகாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார்.  அவருடைய மகளான எனக்கும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் உடற்பயிற்சியில் எப்போதும் ஈடுபாடு காட்டுகிறேன். ஜிம்மில் இருக்கவே அதிகம் பிடிக்கிறது. தற்போது பெண் ...

ஓவர் குடி - கதறி அழுகிறார் - மதுவுக்கு அடிமையாகி வாழ்கையை தொலைக்கும் பிரபல தமிழ் நடிகை..!

Image
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் அந்த நடிகை. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டதால் அதனுடைய அருமை தெரியாமல் போட்விட்டது போல, ஒரு முறை மார்க்கெட் கிடைத்தால் அதனை கெட்டியாக பிடித்து கொண்டு திருமணம் செய்யாமல் 35 வயது முதல் 40 வயது ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் ஏராளம்.  ஆனால், அம்மணி அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காதலில் விழுந்தார். அவருடைய காதல் ஜெயித்து கல்யாணத்தில் முடிந்தது. ஆனால், கல்யாணம் தோல்வியடைந்து விவாகரத்தில் முடிந்து விட்டது வேதனை.  திருமணம் ஆன பின்பு சினிமாவை விட்டு இரண்டு ஆண்டுகள் ஒதுங்கி விட்டார். முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை ஆறு மாதங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தாலே போதும் மார்கெட்டை இழந்து விடுவார்கள்.  ஆனால், அம்மணியோ இரண்டு ஆண்டுகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டார். பிறகு, விவாகரத்தான பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், சினிமா அவரை வரவேற்கவில்லை. எப்படியோ, சில படங்களில் வாய்பை பெற்று விட்டார்.  கடைசியாக வெளியான ஒரு படத்தில் மிகவும் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்...

மேலாடையின்றி ஆடுகளம் பட நடிகை - ரசிகர்கள் ஷாக்

Image
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. சினிமாவில் வருவதற்கு முன்பு தான் செய்த வேலை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் டாப்ஸி.  இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் நான் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போது நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவியாக இருந்தேன். அது போக நான் படிப்பில் பல பதக்கங்களையும் வென்றுள்ளேன். சினிமாவில் நுழைந்த போது என் உருவத்தை கிண்டலடித்தார்கள். ஆனால், நான் தொடர்ந்து முயற்ச்சி செய்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஒரு காலத்தில் நான் வாய்பை தேடி அழைந்தேன். இப்போது, என்னை தேடி வாய்புகள் வருகின்றன. இது என்னுடைய பெருமைக்காக நான் சொல்ல வில்லை. ஆரம்பத்தில் பட வாய்புகள் தேடி நான் அழைந்த நாட்கள் மிகவும் கடினமானவை.என்று கூறினார்.  தற்போது, பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு பாலிவுட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  இந்நிலையில், அடுத்து நடிக்கவுள்ள தப்பாட் என்ற ஒரு ஹிந்தி ப...

இப்போது அதற்க்கான நேரம் வந்துள்ளது - ரசிகர்களை குஷியாக்கிய நடிகை மாளவிகா

Image
அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. ‘வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்…’ என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.  ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரைத் திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.  மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார்.  இவற்றில் நடிக்க பேச்சு நடந்து வருகின்றது. மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறியதாவது, “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். இரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள்.  வாளமீனு பாடல் எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இப்போது அதற்கான நேரம் வந்து...

காஜல் அகர்வாலின் ரகசியமான கவர்ச்சி போட்டோ ஷூட்..!

Image
நடிகர் விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு கோடிகளில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. நடிகைகள் ரேவதி மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட சில நடிகைகள் கொஞ்சம் வித்தியாசமாக நடிகைகள் என்பதில் இருந்து மாறி இயக்குனர்களாகவும் மாறியுள்ளனர்.  இதனை தொடர்ந்து இன்னும் சில நடிகைகள் நானும் இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.  ஆனால், காஜல் அகர்வால் சற்று வித்தியாசமாக தயாரிப்பாளர் ஆக ஆசைப்பட்டார். இதையடுத்து கதை கேட்க ஆரம்பித்தார். இயக்குனர் பிரசாத் வர்மா கூறிய ஆவ் 2 என்ற ஸ்கிரிப்ட் பிடித்ததால் தயாரிக்க முன்வந்தார். இதற்காக காஜல் அகர்வால் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கவும் முடிவு செய்தார். ஏற்கனவே, பெண்களுக்கான அணிகலன்கள் விற்கும் கடை மற்றும் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடைரெஸ்ட்டாரன்ட்கள் என நடிப்பு தவிர தொழில் துறையிலும் கொடி கட்டி பறந்து வரும் காஜல் அகர்வாலுக்கு சினிமா தயாரிப்பில் ஆர்வம் வந்தது ஒன்றும் தப்பில்லை.  ஆன...

14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர் - இப்போது எப்படி இருக்காங்க-னு பார்த்த தூக்கி வாரிப்போடும் - இதோ புகைப்படங்கள்

Image
நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜீவாவுடன் "யான்" படத்தின் ஹீரோயினாக நடித்தார்.  படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. இப்படி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார். இதனை தொடர்ந்து முதலில் படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார்.  தற்போது, மும்பையில் உள்ள "Podar International School"-ல் தனது இறுதியாண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார். மேலும், கல்லூரியில் சேர்ந்த பிறகு நடிப்பை தொடரும் முடிவில் இருகிறாராம்.  மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். தற்போது உடல் எடை கணிசமாககூடியுள்ளார் துளசி. தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் இவர்.  ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வரவே இல்லை. இவர் இப்போது, ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகியுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர...

இந்த ட்ரஸ் போடுவதற்குப் போடாமலேயே இருக்கலாம் - ரசிகருக்கு தளபதி 64 பட ஹீரோயின் கொடுத்த பதிலடி..!

Image
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார்.  தளபதி64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர்.  இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ட்ரஸ் போடுவதற்குப் போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர்.  இதனால், கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

மிகவும் இறுக்கமான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை நமிதா - வைரலாகும் புகைப்படங்கள்

Image
மச்சான் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நமீதா நியாபகம் வந்துவிடுவார். சினிமாவில் நுழைந்த சிறிய காலத்திலேயே அதிக பிரபலம் ஆகிவிட்டார், அதோடு கவர்ச்சி புயலாகவும் இருந்தார்.  இவர் நிகழ்ச்சிகளில் மச்சான் என்று கூப்பிடும் அழகிற்கே ரசிகர்கள் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தனது நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்துகொண்டார்.  இந்த நிலையில் திருமணத்திற்கு முன் கவர்ச்சி புயலாக இருந்த நமீதா இப்போதும் அப்படியே இருக்கிறார். சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சிக்கென மாறியுள்ளார்.  இந்நிலையில், இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ, 

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..! - நீண்ட நாள் கழித்து பிகினி உடையில் சன்னிலியோன் -வைரலாகும் புகைப்படங்கள்

Image
ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் மட்டும் நடித்து இளசுகளின் நாடித்துடிப்பை பதம் பார்த்து கொண்டிருந்தார் இந்திய வம்சா வழியை சேர்ந்த நடிகை சன்னி லியோன். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஹிந்தி பட உலகின் பிரபலமான நடிகையாக மாறி விட்டார். இந்தி பட உலகின் அனைத்து பிரபல நடிகர்களுடனும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.  அவர், நடிப்போடு, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.  இதனால், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் போடும் பதிவுகளையும், புகைப்படங்களையும் பார்ப்பதற்கென்றே, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.  சமீப காலமாக பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிடாமல் இருந்த சன்னி லியோன்  திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பது போல சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தீபாவளியை கொண்டாட துபாக்கு சென்ற அவர் அங்கிருக்கும் நட்சத்தி...

மிகவும் மோசமான பரவை முனியம்மாவின் உடல்நிலை - நேரில் சென்று உதவி செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே

Image
பிரபல நாட்டுபுற பாடகி பரவை முனியம்மா. மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற கிராமத்தில் பிறந்ததாள் பரவை முனியம்மா என்று பிரபலமானார். விக்ரம் நடிப்பில் வெளியான "தூள்" படத்தில் இடம் பெற்ற சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடலின் மூலம் சினிமாவில் தன்னுடைய குரலை பதித்தார்.  இதன் மூலம் இவருக்கு பல பட வாய்புகள் மற்றும் மேடைகளில் பாடும் வாய்புகள் வந்தன. அந்த அளவுக்கு தூள் படத்தின் பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.  தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர் உடல்நிலை அடிக்கடி மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.  மறைந்த முதலமைச்சர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு கட்டத்தில் இவருக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ருபாய் பணம் கிடைத்து வருகின்றது. அந்த தொகை சிகிச்சைக்கு போதவில்லை.  இந்நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை சில வாரங்களாக மோசமாகவே உள்ள நிலையில் பிரபல நடிகர் அபி சரவணன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பண உ...

தமிழகத்தில் திணறும் பிகில் - ஐந்து நாட்களில் வசூல் இவ்வளவு தானா...?

Image
நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிகில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. முன்னதாக, தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் 100 கோடிக்கும் மேல் விற்பனை ஆனது. இதனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் மினிமம் 150 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும். அப்போது தான் படம் லாபம் என்ற நிலைக்குள் நுழையும் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருந்தார்.  இந்நிலையில், ஐந்து நாட்கள் முடிவில் இந்த திரைப்படம் தமிழகத்தில் 90 கோடிகளை வசூல் செய்துள்ளது. இன்னும், 60 கோடிரூபாய் வசூலித்தால் தான் நஷ்டம் என்ற நிலையை தான் லாபம் என்ற நிலைக்குள் பிகில் நுழையும்.  இந்நிலையில்,தொடர்ந்து வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் குறையும் என்றும் இந்த வார முடிவில் தமிழகத்தில் மட்டும் 100 முதல் 110 கோடி என்ற இலக்கை அடைந்து விடும் என்றும் நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், இந்த வாரம் மூன்று புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் பிகில் தமிழகத்தில் மட்டும் 150 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு திணறும் என்று கூறுகி...

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள ரகுல் பரீத் சிங் - வைரலாகும் வீடியோ

Image
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  அதோடு, ஹிந்தி, தெலுங்கிலும் நடித்து வரும் அவர், ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள மர்ஜாவான் படத்தில் நடித்துள்ளார்.  வரும் நவம்பர் 15-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் ஹய்யா ஹோ என்ற பாடலுக்கு ரகுல் பிரீத் சிங் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டமாடி இருக்கிறார். இந்த வீடியோ பாடல் இருதினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. ஒரேநாளில் 51 லட்சம் பேரும், தற்போது வரை 75 லட்சம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.

பிகில் வசனம் - மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்

Image
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள "பிகில்" திரைப்படம் வெளியாகி கலைவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கணைகளாக நடித்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார்.  உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா குண்டம்மா என்று சொல்லி திட்டுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து சர்ச்சையானது இந்த விவகாரம்.  இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அந்த வசனம் தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன்.  ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு அப்போதே மன்னிப்பு கேட்டார் என தெரிவித்துள்ளார்.

அஜித்திற்கு எழுதிய கதையில் நடிக்கவுள்ள விஜய் - தல இடத்தில் தளபதி - ஹாட் அப்டேட்

Image
லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனராக சினிமாவில் களமிறங்க இப்போது கைதி என்ற படம் மூலம் வெற்றிநடைபோடுகிறார். கார்த்தி நடித்துள்ள இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி, ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.  இந்நிலையில், இவர் அடுத்து விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், படத்திற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஆனால் விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கும் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம்.  முதலில் அஜித்திடம் இந்த கதையை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அவர் ஏற்கெனவே வினோத் படத்திற்கு நாட்கள் ஓதுக்கியிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.  இந்நிலையில், லோகேஷ் கனகராஜை அழைத்த விஜய்யிடம் அந்த கதையை கூறியுள்ளார். கதை கேட்ட விஜய்க்கு உடனே பிடித்து போய்விடவே நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த கதை தான் தற்போது, "தளபதி64" படமாக தயாராகி வருகிறது. மேலும், சூர்யாவை வைத்து இயக்கவிருந்த "இரும்புக்கை மாயாவி" என்ற படத்தை இயக்கவிருந்த லோகேஷ். விஜய் கால்ஷீட் கிடைத்த காரணத்தினால் அந்த படத்தை ஒத்தி வைத்துவிட்டார். இதனால், தற்போது இயக்குன...

ஹன்ஷிகாவிற்கு கிடைத்த தீபாவளி பரிசு - விலையை கேட்டால் கிறுகிறுன்னு வந்துடும்..!

Image
ஒரு காலத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஹன்சிகா. வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்த பின்பு இவரது மார்கெட் எகிறியது.  கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த இவர் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் விவகாரத்தில் சிக்கினார். பிறகு காதல் தோல்வி, இணையத்தில் லீக் ஆன கசமுசா வீடியோக்கள் என அம்மணியின் மார்கெட் எரிய வேகத்தில் தலை குப்புற விழுந்தது. தற்போது வாய்ப்புகள் குறைந்து சோலோ ஹீரோயினாக படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது மஹா உள்ளிட்ட சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.  இந்நிலையில், ஹன்ஷிகாவின் அம்மா தீபாவளிக்காக ஒரு விலையுயர்ந்த கிப்ட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆம், RR Phantom VIII series 2019 காரை தான் பரிசாக கொடுத்துள்ளார். இதனுடைய விலை ஜஸ்ட் 12,000,0000 ரூபாய் தான் பாஸ்.

அட..! - லோகேஷ் கனராஜ் இயக்கும் "தளபதி 64" கதை இந்த முன்னணி நடிகருக்காக எழுதப்பட்டதா..?

Image
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிகில் படத்தை விட சிறப்பான விமர்சனங்களை பெற்று நல்ல வசூல் செய்துகொண்டிருகின்றது. ஆனாலும், கைதியிடம் பிகில் தோற்று விட்டதே என்ற கவலை விஜய் ரசிகர்களிடம் இல்லை.  காரணம், விஜய்யின் அடுத்த பட இயக்குனர் கைதி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தான். பிகில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியாகி விட்டது.  கைதி படத்தை போலவே இந்த படமும் டார்க் மோடில் தான் எடுக்கப்படும் என தெரிகின்றது. இந்நிலையில், இந்த படத்திற்கு முன்பே நடிகர் சூர்யாவை வைத்து "இரும்புக்கை மாயாவி" என்ற படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் தயாரக இருந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.  நடிகர் விஜய்யின் கால்சீட் கிடைக்கவே இந்த படத்தை ஒத்தி வைத்துவிட்டு தளபதி 64 படத்தை இயக்க சென்று விட்டார். ஒருவேளை, இரும்புக்கை மாயாவி படத்தை தான் விஜய்யை வைத்து எடுக்கிறாரா..? அல்லது வேறு படமா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

"லக்ஷ்மி" குறும்பட நடிகைக்கு திருமணம் - மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

Image
லக்ஷ்மி என்ற குறும்படத்தின் மூலம் பலரது கவனத்திற்கு வந்தவர் நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி.இந்த குறும்படத்திற்கு முன்பு பல விளம்பர படங்களில் இவர் நடித்திருந்த போதிலும் லக்ஷ்மி குறும்படம் தான் இவரை பலருக்கும் அடையாளபடுத்தியது. மேலும், இவர் முன்தினம் பார்த்தேனே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார். இப்பொது, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் வெளியாகும் முன்பே பல விருதுகளை குவித்துள்ளது. ஆனால், இன்னும் ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்குகின்றது. இவர் நடித்த லக்ஷ்மி குறும்படம் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.  இந்நிலையில், லக்ஷ்மி பிரியா சந்திரமவுலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல எழுத்தாளரான வெங்கடராகவன் ஸ்ரீநிவாஸனை தான் இவர் இவர் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

அம்மாடியோவ்...! - "பிகில்" தென்றலா இது..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

Image
தமிழில் படை வீரன் என்ற படத்தில் "மலர்" என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர் நடிகை அம்ரிதா நாயர். இந்தபடத்திற்கு முன்பே விஜயின் "தெறி" படத்தின் சமந்தாவின் தோழிகளில் ஒருவராக தோன்றினார். அதனை தொடர்ந்து காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்போது, விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள "பிகில்" திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்துள்ளார்.  இவருக்கும் விஜய் என்ற பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம் என்று தெரியவில்லை. இவருடைய முதல் படத்தின் ஹீரோ விஜய் யேசுதாஸ், இரண்டாம் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி, மூன்றாவது படத்தின் ஹீரோ விஜய். இப்படி தொடர்ந்து விஜய்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் அம்ரிதா தன்னுடைய முதல் படமான படை வீரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி களமாடியுள்ளார். அந்த வீடியோ பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் பிகில் தென்றலா..? இது என ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.  இதோ அந்த பாடலில் இருந்து ஸ்நாப்பிய புகைப்படங்கள் சில,