+
பிரபல தனியார் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் டிடி, ஆரம்ப காலாத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கி நீண்ட ஆண்டுகளாக அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் கூட இவருக்கு 20 ஆண்டுகால தொகுப்பாளினி பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என விழாவும் கொண்டாடப்பட்டது. இவர் திருமணமாகி இடைப்பட்ட காலத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றவில்லை சிறிது இடைவெளி விட்ட பிறகு, திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்து பெற்றார்.
மீண்டும் தனது தொகுப்பாளினி பணியை துவங்கினார். அதே போல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
டிடி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனை தொடர்ந்து தற்பொழுது 10 வருடத்திற்கு முன்பு எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.