ராயப்பனாலயா..? மைக்கேல்னாலயா...? - பிகிலே....! - 30 நிமிடத்தில் அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்..!


அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லர் வெளியான 30 நிமிடத்தில் 7 லட்சம் லைக்குகளை அடித்து நொருக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Advertisement