விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதை அடுத்து, டிவிட்டரில் பிகில் படத்துக்கான பிரத்யேக எமோஜி வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்ட நிலையில், டிக்கெட்டுகளை புக் செய்து ரசிகர்கள் கொண்டாட்ட மழையில் நனையத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சற்று முன் கிடைத்த தகவல் படி முன்பதிவு தொடங்கிய 80% திரையரங்குகளில் வெள்ளி, சனி, ஞாயிறு என முதல் மூன்று நாட்கள் ரிசர்வேஷனிலேயே ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது பிகில்.
திங்கள் கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் நாளை மதியத்திற்குள் நான்காவது நாளான திங்கட்கிழமையும் ஹவுஸ் ஃபுல்லாகி விடும் என்று கணிக்கிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒப்பனிங்கை பிகில் கொடுக்கும் எனவும் முந்தைய படங்களில் சாதனைகளை எளிமையாக முறியடித்துவிடும் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகிரார்கள.