விஜய் அட்லீ - கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இத்திரைப்படம்
வெளியாகும் நாள் நெருங்கி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
இன்று பிகில் திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில்,
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் அதேவேளையில் தியேட்டர் உரிமையை வழங்க அதிக விலை கேட்பதால் பட வெளியீட்டில்
இருக்கும் சில சிக்கல்கள் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும்
விநியோகஸ்தர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுரமிருக்க பிகில் கதை என்னுடையது என்று செல்வா என்பவர் வழக்கு தொடர அதனை கீழமை நீதிமன்றம் தள்ளபடி செய்தது. இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி இயக்குநர் செல்வா,
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர அனுமதி
அளித்துள்ளது.
மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம்
மனுதாரரான செல்வா தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிகில் படக்குழுவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.
ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை,
காப்புரிமை என்பதால் செல்வா வாபஸ் பெற்று உயர் நீதிமன்றத்தை
நாடியிருந்தார். ஒருவேளை செல்வா காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்காக
படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால்
வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் வெளியாவதில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.