அஜித், விஜய் பட பிரச்னையால் சிக்கலில் சங்கத்தமிழன் - தீபாவளி ரேஸில் இருந்து விலக இது தான் காரணமாம்..!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் "பிகில்" படத்திற்க்கு போட்டியாக தீபாவளி ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டு பிறகு பின் வாங்கியது. 

அதற்க்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தியேட்டர் கிடைக்காததால் பின்வாங்குவதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில், படம் ரிலீஸ் ஆவதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. சங்கத்தமிழன் படத்தை தயாரித்துள்ள விஜயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சேலம் பகுதி விநியோகஸ்த்தர் 7ஜி சிவா என்பவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்கு முன்பு விஜயா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த வீரம் பட உரிமையை வாங்கினோம். படம் ஹிட் அடித்தது. ஆனால், அந்த படத்தால் நஷ்டம்தான் வந்தது. அதன் பிறகு, விஜய் நடிப்பில் வெளியான "பைரவா" ரிலீஸ் சமயத்தில் அதற்க்கு தருவதாக சொன்ன நஷ்ட ஈடு தொகையை இன்று வரை தரவில்லை. 

தற்போது, அந்த பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே "சங்கத்தமிழன்" படத்தை வெளியிட அனுமதிப்போம் என விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post
--Advertisement--