உலக அளவில் பிரபலமான மாத இதழ்களில் ஒன்றான "வோக் (VOGUE) " இதழின் அட்டைப்படத்தில் நடிகை நயன்தாராவின் படம் இடம் பெற்றுள்ளது.
அந்த இதழின் இந்திய பதிப்பு, தனது 12வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி வெளியிட்டுள்ள சிறப்பு இதழின் அட்டைப் படத்தில் நயன்தாரா, மகேஷ் பாபு, துல்கர் சல்மான் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
நயன்தாராவை 'தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்' எனவும் அந்த இதழில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்தாரா, தன்னை ஏளனப்படுத்தியவர்களுக்கு, தனது வெற்றி தான் பதில்' என கூறியுள்ளார்.
Tags
Nayanthara