2018-ம் ஆண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், இந்த 2019 வருடம் அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்துவிட்டார் தல அஜித்.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று விஸ்வாசம், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அப்பா மகள் சென்டிமென்ட்டை தாங்கி வந்த விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடிய படம், நேர்கொண்ட பார்வை கதைக்காகவே ரசிகர்கள் அதிகம் வரவேற்ற படம்.
இந்த இரண்டுமே இந்த வருடத்தின் டாப் ஹிட் பட வரிசையில் உள்ளது.
இவர் நடித்துள்ள விஸ்வாசம் படம் கன்னட மொழியில் "ஜக மல்லா" என்ற பெயரில் டப்பாகி அண்மையில் வெளியானது.
அங்கும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளதாம்.
அங்கு இவ்வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.