சமீபத்தில் தமிழகத்தையே மிரள வைத்தது திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம். ஆனால், அந்த திருடர்களை குறுகிய காலத்திற்குள் கண்டறிந்து ஸ்காட்லான்ட் போலீஸ் ஃபோர்ஸ்-ற்கே சவால் விடும் வகையில் பணியாற்றி மாஸ் காட்டியது தமிழ்நாடு போலீஸ்.
இது ஒரு பக்கம் இருக்க குறுகிய காலத்தில் முன்னணி நடிகையான அந்த வாரிசு நடிகையுடன் கொள்ளையனுக்கு தொடர்பு இருக்கிறது என்ற செய்தி வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்சிகுள்ளாக்கியது.
அந்த கொள்ளையனுடன் தமிழ் நடிகை ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று தான் தகவல் வந்ததே தவிர அவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் அந்த நடிகை வாரிசு நடிகைதான் என காது, மூக்கு வைத்து வதந்தி பரவிவிட்டது. இதனால், கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாராம் நடிகை.
இதனை அறிந்த தாய்க்குலம் பிரபலம், நடிகை என்றால் இது போன்ற பிரச்னைகள், வதந்திகள் வருவது இயல்பு தான். இதற்கெல்லாம் கவலை பட்டால் வேலைக்கு ஆகாதுமா என மகளை தேற்றி வருகிறாராம்.
Tags
Gossip