நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் ஸ்ருதிஹாசன். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், கையில் கிட்டாரை வைத்துக்கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அவரது ஸ்லோ மோஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.