தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றால் நம்பியாருக்கு பிறகு ரகுவரன் தான் என்று அடித்து சொல்லலாம். கரகரத்த குரல், கம்பீரமான பார்வை என ஹீரோக்களை கிடுகிடுக்க வைத்தவர் ரகுவரன்.
கேரளாவில் பிறந்த நடிகர் ரகுவரன் தமிழ்
,தெலுங்கு ,கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர்
ஆவார். ஏழாம் மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
கதாநாயகனாக அறிமுகமானார் ரகுவரன்.
இருப்பினும் மார்க் ஆண்டனியாக இவர் வலம் வந்த பாட்ஷா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய
திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது என்றே கூறலாம். ஏனெனில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்துக்கு இணையாக ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் பாஷா படத்தின்
பிறகுதான் இவருக்கு அமைந்தது.
இதற்குப்
பின்பு வில்லன் கதாபாத்திரம் என்றால் அதற்கு ரகுவரன் தான் சரியானவர் என்று
ரசிகர் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர் இவர்தான். கடந்த 1996ஆம் ஆண்டு ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து
கொண்டார் திருமணமான இரண்டு ஆண்டுகளில் இவருக்கு ரிஷி என்ற ஒரு மகனும்
பிறந்தார்.
ஆனால் திருமணவாழ்க்கை இவர்களுக்கு சரியாக அமையவில்லை என்றுதான்
கூற வேண்டும். ஏனெனில் கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து
பெற்று பிரிந்துவிட்டனர்.
இதனால் மிகவும் மனமுடைந்து போனார் ரகுவரன். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய இல்லத்தில் உயிரிழந்தார்.
இவரது மறைவு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரகுவரன் மறைந்தாலும் தற்போது அவரது மகனான
ரிஷிவரன் மீடியா வெளிச்சத்துக்கு வந்துல்ல்ளர்.
தற்போது
ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி
வருகிறது. ரிஷிவரனை பார்த்த நெட்டிசன்கள் ரகுவரனுக்கு இவ்வளவு பெரிய மகனா ? என்று ஷாக் ஆகிவருகின்றனர்.