சோதனை மேல் சோதனை - கோயில் யோயிலாக சுற்றும் உச்ச நடிகை


சர்ச்சைக்கு பெயர் போனவர் அந்த உச்ச நடிகை. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அவரது சினிமா வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக தோல்வி துரத்துகிறது. 

சமீபத்தில் வெளியான ஸ்போர்ட்ஸ் படம் கூட கலவையான விமர்சங்களையே சந்தித்தது. படத்தில் உச்ச நடிகை வந்த காட்சிகள் படத்தின் இழுவை என்றும், அவர படத்தில் இல்லாமலேயே இருந்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தால் மிகவும் மனம் நொந்து போயுள்ளார் அம்மணி. 

படத்தில் இவருக்கு சம்பளம் ஒரு பக்கம் என்றால் அவரது மேக்கப் செலவு லட்சங்களில் இருக்கிறதாம். ஆனாலும், தயாரிப்பாளர்கள் நடிகையை வைத்து படமெடுத்து தான் வந்தார்கள். ஆனால், அதையும் தாண்டி படத்தின் ப்ரோமஷன் நிகழ்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிராராம். 

அப்படி ப்ரோமோஷன் நிகழ்சிகளில் தோன்ற தனியாக சம்பளம் கேட்பதால் உச்ச நடிகையை கழட்டி விட்டு வருகிறார்கள் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இதனால், மன அமைதிக்காக கோயில் கோயிலாக சுற்றி வரும் இவர் தனது காதலனுடன் இமயமலைக்கு விசிட் அடிக்க ஆயத்தமாகி வருகிறாராம்.