49 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.? - நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்


90களின் சூப்பர் ஹீரோயின் நடிகை குஷ்பு. அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ரசித்தனர். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. டைரக்டர் சுந்தர்.சியை மணந்த பிறகு சினிமாவில் நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார் குஷ்பு. 

அரசியல், திரைப்படங்கள் தயாரிப்பது, டிவி சீரியலில் நடிப்பது என்று தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். சுந்தர், குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

தீவிரஅரசியலில் இருந்து சற்றே ஒதுங்கியுள்ள நடிகை குஷ்பு லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த பல ரசிகர்கள், வாவ்.. க்யூட்.. உங்களுக்கு வயசே ஆகல என்று ஜொள் வடித்துகொண்டிருக்கும் நிலையில், டார்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்டை அணிந்து கொண்டிருக்கும் அவரை பார்த்த சில நெட்டிசன்கள் 49 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது என விளாசி வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம்,


--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்