தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலேயேபிரபல நடிகர்கள் ஒரு கதையில் நடிக்க மறுப்பதும் பிறகு அந்த படங்களில் செம்ம ஹிட் அடிப்பதும் வழக்கமான ஒன்று தான்.
ஆனால்,பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் என தொடர்ந்து மூன்று ப்ளாக்பஸ்டர் படங்களை தவற விட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வந்து விட மாட்டோமா... என படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வாரிசு நடிகருடைய உண்மை கதை தான் இது.
அந்த நடிகர் வேறு யாரும் இல்ல, நம்ம பாக்யராஜ் மகன் ஷாந்தனு பாக்யராஜ் தான். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" படத்தில் முதலில் ஷாந்தனுவை தான் நடிக்க கேட்டாராம் ஷங்கர். ஆனால், பையன் ரொம்ப சின்ன பையனா இருக்கான் கொஞ்சம் காலம் போகட்டும் என அந்த வாய்பை தவற விட்டுள்ளார் பாக்யராஜ்.
தொடர்ந்து, ஷங்கர் தயாரித்த காதல் படத்தில் முதலில் நடிக்க ஷாந்தனுவை தான் தொடர்பு கொண்டிருகிறார்கள். ஆனால், படம் ரொம்ப ட்ராஜடியா இருக்கு எனவும் முதல் படம் கமர்ஷியலா கொடுக்கணும் எனவும் அந்த வாய்ப்பையும் தட்டி விட்டு விட்டாராம் பாக்யராஜ்.
இறுதியில் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடிக்கவிருந்த கேரக்டரில் ஷாந்தனுவை நடிக்குமாறு கேட்க என் மகன் முதல் படம் நடிச்சுட்டு இருக்கான் அது முடிஞ்சதும் வேற படம் பண்றது பத்தி யோசனையே என்று அதையும் தட்டி கழித்துள்ளார் பாக்யராஜ்.
இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது ஒரு ஊடகம். அதற்கு பதிலளித்துள்ள ஷாந்தனு "படம்லாம் கரெக்ட் தான். ஆனால், அந்த படங்களை தவிர்க்க காரணம் இவை கிடையாது.. என்று கூறியுள்ளார்."
எப்படியோ லட்டு மாதிரி வந்த மூன்று ப்ளாக் பஸ்டர் படங்களை தவற விட்டுவிட்டு இப்போது முட்டிமோதிக்கொண்டிருக்கிறார் ஷாந்தனு என்பது தான் உண்மை.



