ஆத்தா.. நீ சோத்த போடு - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


‘சித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார். 

வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, வண்டி ஆகிய படங்களிலும் தெலுங்கிலும் 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சாந்தினிக்கும் நந்தா என்ற நடன இயக்குனருக்கும் காதல் மலர்ந்தது. 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே, வில் அம்பு, பியார் பிரேமா காதல், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடன இயக்குனராக நந்தா பணியாற்றி உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெற்றோர்களும் இதற்கு சம்மதிக்க கடந்த திருமணமும் நடந்தது. 

இப்போது, சீரியல்களில் நடித்து வருகிறார் சாந்தினி.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாழம்பூ சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாந்தினி அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வாவ்.. க்யூட் என புகழ்ந்து கொண்டிருக்க, ஒரு சில ரசிகர்கள் கலாய்த்து வருகின்றன. 


அதில் ஒருவர், சீக்கிரம் உங்களுக்கு ப்ளூ டிக் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும், மற்றொரு ரசிகர் ஆத்தா, நீ சோத்த போடு என்று அமர்ந்துள்ளார் என்று கலாய்த்துள்ளார்.