தான் நடிக்கும் படங்களில் தலைக் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் காமெடி பட்டாசு கொளுத்தும் யோகி பாபுவின் அடுத்த அவதாரம் கதாநாயகன்.
'தர்மபிரபு', 'ஜாம்பி', 'பன்னிக்குட்டி' என கதாநாயகன் வேடத்துக்கு வரிசைக் கட்டி நின்ற படங்கள். சமீபத்தில் வெளியான பிகில் படத்திலும் காமெடியனாக நடித்திருந்த இவர் ரஜினி காந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும் நடித்து வருகிறார்.
கவுண்டமணி, வடிவேலு வரிசையில் பாபுவின் கால்ஷீட்டுக்குக் காத்திருக்கிறது கோடம்பாக்கம். 'வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி!என்று கூறுகிறார் யோகி பாபு.
இவர்
2009-ம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் அறிமுகமாயிருந்தலும், 2014-ம்
ஆண்டு வெளிவந்த யாமிருக்க பயமேன் திரைப்படத்திற்கு பிறகு மிகவும்
பிரபலமாகிவிட்டார்.
இருந்தாலும் அறிமுகமான படம் யோகி என்பதால் பாபு வாக இருந்த இவர் யோகி பாபு-வாக தற்போது கலக்கி வருகிறார். இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிகின்றன.
இந்நிலையில், இவருக்கு தற்போதுதிருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவருடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவளும் நானும் என ஹெலோ ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் யோகி பாபு.




