அந்த வூட்டுட்டுக்கு போயிட்டு வந்த பொறவு வாரிசு நடிகைக்கு நிக்க கூட நேரமில்லையாம்..!


பெரிய குடும்பத்து வாரிசு நடிகை கடந்த பல வருடங்களாக காதல் தோல்வி, திருமணம் தோல்வி என அடிமேல் அடி வாங்கி வந்தார். குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், பிரபல தொலைகாட்சி ஒன்றின் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல் அந்த வீட்டில் உள்ளவர்கள், அதனை பார்க்கும் ரசிகர்கள் என நாளுக்கு நாள் கெட்ட பெயரை மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தார் அம்மணி.

இவரை வெறுத்த ரசிகர்கள் நிகழ்ச்சியில் இருந்து துரத்தி விட்டனர். ஆனால், இவர் போன பின்பு நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து விட்ட காரணத்தினால் கெஸ்ட் என மீண்டும் கூட்டி வந்து மறுபடியும் போட்டியாளர் ஆக்கிவிட்டார் பெரிய முதலாளி.

இந்நிலையில், இப்போது அவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறதாம். சீரியல், சினிமா என இவரை போட்டி போட்டுக்கொண்டு புக் செய்கிறார்களாம். மேலும், தன் பெயரை கெடுத்தது அந்த நிகழ்ச்சி தான் என்றாலும் ரசிகர்களுடன் நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்பதால் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சீரியல்களில் மற்றும் நிகழ்சிகளில் பணியாற்ற முடிவு செய்துள்ளாராம் நடிகை. 

இதனை பார்த்த சக போட்டியாளர்கள், எங்களுக்கே ஒரு வாய்ப்பும் வரவில்லை இவருக்கு வாய்புகள் குவிகிறதே ரஎன்று வயித்தெரிசலில் இருக்கிறார்களாம்.

--- Advertisement ---