விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் சில பல பிரச்சினைகளால் படம் வெளியாகவில்லை.
நேற்று முழுதும் நடந்த பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று (நவம்பர் 16) இரவு வெளியாகும் என்கிறார்கள்.
நடிகர் அஜித்தின் 'வீரம்' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் சில வினியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய வரிவிலக்குத் தொகையை படத் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை அந்த காரணத்தினால் 'சங்கத்தமிழன்' வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
அது குறித்து விஜய் ரசிகர்கள் 'வீரம்' பற்றியும், அஜித் பற்றியும் சமூக வலைத்தளங்களில் திட்டி பதிவிட ஆரம்பித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 'வீரம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் விஜய் நடித்த 'பைரவா' படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
அதன் தோல்வியால்தான் இன்று நிதிப்பிரச்சினையில் அவர்கள் சிக்கி உள்ளார்கள் என அஜித் ரசிகர்கள் பதிவிட்டனர்.இதனை தொடர்ந்து விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் மோதல் உருவாகியுள்ளது.


