விடுதியில் இருந்து வந்த மரண ஓலம் - தெறித்து ஓடிய இளைஞர்கள் - டிக்டாக் மோகத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்


ஆண் நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட மனைவியை, கணவன் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மஞ்சுலதா என்கிற நர்சிங் மாணவி தன்னுடைய வீட்டின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்கிற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். 

ஒரு கட்டத்தில் பெற்றோரின் தொந்தரவால், மஞ்சுலதா தனது காதல் கணவர் சைஃப் கானை விட்டு பிரிந்து மீண்டும் நர்சிங் விடுதிக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார். 

அதேசமயம் சைஃப் கான் மற்றும் அவனுடைய நண்பன் முஸ்தபாவும் விடுதிக்கு வந்துள்ளனர். பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. 

அப்போது கடுமையான ஆத்திரமடைந்த சைஃப் கான், திடீரென அருகில் இருந்த தோசை கல்லால் மஞ்சுலதாவை பயங்கரமாக அடித்து கொலை செய்துள்ளான். அதனை தடுக்க வந்த தனது மச்சினியும், மனிஷாவின் தங்கையுமான மனிஷாவை கத்தியால் குத்தியுள்ளான். 


இதில் இருவருமே பலத்த ரத்த காயத்துடன் பயங்கரமாக கத்தியுள்ளனர். விடுதியில் இருந்து வந்த மரண ஓலத்தை கேட்டு ஓடிவந்த விடுதி பாதுகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார். 

ஆனால், அந்த விடுதி காப்பாளரிடம் இருந்து இருவரும் லாவகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பலத்த ரத்த சேதம் ஏற்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளன மஞ்சுலதா மற்றும் மனிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவத்தை பற்றி அறிந்து வந்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் கோபமாக இருந்துள்ளார் சைஃப் கான். மேலும், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக தனது மனைவி மஞ்சுலதா டிக் டாக் செய்ததால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். 

இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொலை செய்ய உடந்தையாக இருக்கும்படி அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.