பரபரப்பை கிளப்பிய சுச்சிலீக்ஸ் - யார் காரணம்.? - தற்கொலை விவகாரம் - பாடகி சுசித்ரா பரபரப்பு பேட்டி


கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் உலுக்கிய ஒரு சம்பவம் சுச்சிலீக்ஸ். 

பிரபல பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் கணக்கின் வழியாக பல பிரபல நடிகைகளின் மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. 

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் பாடகி சுசீத்ரா தனது சொந்த பிரச்சனைகளால் மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். 

ஒரு கட்டத்தில், இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார். இப்போது பல பிரச்சனைகளை தாண்டி மன உளைச்சலில் இருந்து மீண்டு தற்போது அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெளிநாட்டில் ஃபிரெஞ்ச் சமையல் பற்றி படித்து நாடு திரும்பியுள்ளார். 

தற்போது, அவர் பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளாராம். அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கும் அந்த சுச்சீ லீக்ஸ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டை யாரே ஹேக் செய்து அதனை செய்து விட்டார்கள் என்று மீண்டும் கூறியுள்ளார். அதோடு நான் தற்கொலை முயற்சி செய்ததாக சில தகவல்கள் வெளியாகின, ஆனால், அது எதுவும் உண்மை இல்லை என பேசியுள்ளார்.