பிரபல இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் உருவான "நந்தினி" சீரியலில் நடித்தவர் நித்யாராம். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த சீரியல் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
அதனை தொடர்ந்து, தற்போது பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவரின் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். இந்நிலையில், பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்துவைக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து, நேற்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




