ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது சல்மான்கானுடன் தபங் 3 படத்தில் நடித்துள்ளார்.
பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு சமூக வலைத்தளங்களில் நடக்கும் டிரோல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கினார்.
சமூக வலைதளங்களில் என்னை எல்லோரும் குண்டு குண்டு என கேலி செய்தார்கள். 30 கிலோ குறைந்த பின்னும் கிண்டலடித்தார்கள்.
எனது வளைவுகள், எனது எடை, எனது இமேஜ், என நான் எதையும் மறைப்பதில்லை என்று கூறிய அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.
ஒல்லி பெல்லியாக இருக்கும் அவர் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னை குண்டு என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.





