"Get a Life" - அபிராமியை மறைமுகமாக சாடிய நடிகை ஷாக்சி அகர்வால்..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 முடிந்துவிட்டது. வழக்கம் போல பல சர்ச்சைகளுடன் பரபரப்பாகவே நடந்து முடிந்தது. பொதுவாகவே, பிக்பாஸ் போட்டிகள் முடிந்த பின்பு போட்டியாளர்கள் ஒருவரின் ஒருவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது வழக்கம்.

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களும்  நிகழ்ச்சி முடிந்த பின்பு பலரும் பல போட்டியாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ஷாக்ஷி அகர்வால். இந்த சந்திப்புகள் குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவர்கூறியதாவது, " பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதை நிறுத்தவேண்டிய நேரம் இது. நீங்கள் ஒருவரை சந்திக்கும் போது மற்ற போட்டியாளர்கள் மீது எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது. அவர் ஏன் செல்லவில்லை..? இவர் ஏன் செல்ல வில்லை..? என்று மற்ற போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் எதிர்மறையாக சிந்திக்கிரார்கள். நீங்கள் அவர்களை சந்திக்கும் நேரத்தில் பல விஷயங்களை செய்யாலாம். உங்களுக்காக நின்ற மக்களை மறந்து விடாதீர்கள்" என்று கூறியுள்ளார்கள்.


இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அபிராமியை தான் மறைமுகமாக சொல்றீங்க என்று கூறி வருகிறார்கள்.