குறைந்த விலைக்கு வியாபரம் ஆன "மாஸ்டர்" - தயாரிப்பாளரை அழைத்து விஜய் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


தமிழ் சினிமா வரலாற்றிலேயே படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான உடனே அனைத்து வியாபாரமும் முடிந்த முதல் படமாக நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் இருக்கின்றது.

தியேட்டர், ஆடியோ, சாட்டிலைட், ROI என அனைத்து உரிமங்களும் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்று தீர்ந்து விட்டன.பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் முந்தைய படத்தின் வியாபாரம், வசூல் ஆகியவற்றை வைத்துத்தான் தற்போதைய படத்தின் வியாபாரம் நடக்கும். பிகில் படத்தின் வசூல், வியாபாரம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மாஸ்டர் படத்தின் வியாபாரம் அதிகமாகவே நடந்திருக்க வேண்டும். 

ஆனால், பிகில் படத்தை விட குறைவான தொகைக்கே படத்தை விற்பனை செய்துள்ளனர். காரணம், இந்த படத்தின்இணை தயாரிப்பாளர் லலித்குமார் தான்.

இப்படி செய்வதால் வினியோகஸ்தர்களும் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதே கணக்கு. அவர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமாவும் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தாராம்.படத்தை எடுப்பவர்களே அனைத்து லாபத்தையும் சுருட்டிக்கொள்வது தவறான விஷயம். 

விநியோகஸ்தரகள் தங்கள் பணத்தை வைத்து பெரிய ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால், பல படங்கள் அவர்களை ஏமாற்றி விடுகின்றன. படங்களை குறைந்த விலைக்கு கொடுத்தால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும், அதே சமயம் விநியோகஸ்தர்களும் கணிசமான லாபம் பார்பார்கள் என்று இப்படி செய்துள்ளார் படத்தின் இணை தயாரிப்பளர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜய், அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நல்ல விஷயம் பண்ணி இருக்கீங்க என்று பாராட்டியுள்ளார்\.

குறைந்த விலைக்கு வியாபரம் ஆன "மாஸ்டர்" - தயாரிப்பாளரை அழைத்து விஜய் என்ன கூறியுள்ளார் பாருங்க..! குறைந்த விலைக்கு வியாபரம் ஆன "மாஸ்டர்" - தயாரிப்பாளரை அழைத்து விஜய் என்ன கூறியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on January 29, 2020 Rating: 5
Powered by Blogger.