கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்திய சினிமா ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது நடிகை ஸ்ரீதேவி மரண செய்தி வந்தது.
உறவினர் திருமணத்திக்கு துபாய் சென்ற சென்ற அவர். இந்தியாவிற்கு உயிருடன் திரும்பவில்லை. அவரது உடலை இங்கு கொண்டு வரவே பெரிய பிரச்சனையாக இருந்தது.
பாத்ரூமில் தண்ணீருக்குள் அவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது. போதையில் இருந்தார் எனவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியுள்ளார் எனவும் வதந்திகள் இணையத்தில் வளம் வந்தன.
தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு பற்றி வந்த புத்தகத்தில், அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததும், இதற்கு முன் இரண்டு, மூன்று,, நான்கு முறை பாத்ரூமில் அவர் மயங்கி விழுந்து காப்பற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அப்படி தான் துபாயிலும் அவர் மயங்கி விழ தெரியாமல் தண்ணீருக்குள் சிக்கி இறந்திருக்கிறார் என்று அந்த புத்தகம் கூறுகிறது.


