பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. தமிழில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த உடல்வாகுடன் அழகுதேவதையாக இருந்தாலும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்புகள் வரவில்லை.
லிங்கா படமே முதலும்,கடைசியுமாக அமைந்து விட்டது. ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தில் சிக்கி விடுகிறார்.
அந்த வகையில் தற்போதுபோக்குவரத்து நெரிசல்மிகுந்த சாலையில் பைக் ஓட்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். பைக் ஒட்டியது பிரச்சனை இல்லை. ஆனால், அவரது பாதுகாப்பிற்காக அவரது பாடி கார்டுகள் அவரை சுற்றி ஓடி வந்து டிராஃபிக் ஏற்படுத்தியது தான் சர்ச்சையே.
உங்களுக்கு பைக் ஓட்டனும்-ன்னு ஆசையா இருந்தா போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் ஓட்டுங்கள். இப்படி, ட்ராபிக் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் என்று அவரை விளாசி வருகிறார்கள்.


