"மாஸ்டர்" டீசர் ரிலீஸ் தேதி - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் "மாஸ்டர்". இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் வரை சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது. 

இந்நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம்ம விருந்தாக தான் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் உதாரணம். 

இந்த பாடல் முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது, அது மட்டுமின்றி 1 மில்லியன் லைக்ஸை கடந்து பிரமாண்ட சாதனை செய்தது. 

மேலும், ரசிகர்கள் இந்த வீடியோவை டிக்டாக் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதனால், குட்டி ஸ்டோரி பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. அதோடு இப்பாடல் கடந்த 4 நாட்களாகவே இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

இந்த படத்தின் பட்ஜெட்டும் சொல்லிக்கொள்ளும் படி பெரிது கிடையாது. விஜய் சம்பளம் நீங்களாக 30 கோடிக்கும் குறைவான செலவிலேயே படம் உருவாகியுள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"மாஸ்டர்" டீசர் ரிலீஸ் தேதி - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! "மாஸ்டர்" டீசர் ரிலீஸ் தேதி - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.