பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக்


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. 

அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார். 

இதை தொடர்ந்து   தற்போது தமிழில் 'ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

அப்போது செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகின்றது.

பொதுவாக பொது இடங்களுக்கு நடிகைகள் வரும் இது போன்ற விஷமிகள் சில கண்ட இடங்களில் கையை வைத்து தடவுவது மற்றும் பாலியல் ரீதியாக அத்துமீறுவது என்பது தொடர் கதையாகி வருகின்றது. 

ராஷ்மிகா மந்தனாவிடம் அத்து மீறிய ரசிகரை கண்டு பிடித்து அவருக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனுக்கு உடன் கண்டித்தால் தான் நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக் பிரபல நடிகையை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் வீடியோ - ரசிகர்கள் ஷாக் Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.